search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொண்டர் தற்கொலை"

    தஞ்சை அருகே சுயேட்சை வேட்பாளருக்கு பிரசாரம் செய்த தொண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காரமணிதோப்பை சேர்ந்தவர் சந்திரஹாசன். இவரது மகன் பூமிநாதன் (வயது 26) விவசாய கூலி தொழிலாளி. இவர் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பொன்.பழனிவேல் என்பவருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வந்தார்.

    இந்த நிலையில் பூமிநாதனுக்கும், அவருடன் பிரசாரம் செய்ய வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிலர் பூமிநாதனை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பூமிநாதன், சுயேட்சை வேட்பாளர் பொன். பழனிவேல் தம்பி கோவிந்தராஜிடம் இதுபற்றி தெரிவித்து உள்ளார். ஆனால் இது தொடர்பாக அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராததால் கோவிந்தராஜிடமும் பூமிநாதன் வாக்குவாதம் செய்துள்ளார்.

    பின்னர் வீடு திரும்பிய பூமிநாதன் காரமணிதோப்பு கோவில் திருவிழாவுக்கு வரி வசூல் செய்ய சென்றவர்களுடன் இன்று சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கோவிந்தராஜன் அவரது மனைவி மூக்காயி, மகன் திருலோகசந்திரன் ஆகியோர் பூமிநாதனுடன் தகராறு செய்துள்ளனர். அப்போது மூக்காயி ஊர் மக்கள் முன்னிலையில் துடப்பத்தால் பூமிநாதனை அடித்துள்ளார். இதில் அவமானமடைந்த பூமிநாதன் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுப்பற்றிய புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பூமிநாதன் அண்ணன் அழகர் கொடுத்த புகாரில் , பூமிநாதனை கோவிந்தராஜ், அவரது மனைவி மூக்காயி, மகன் திருலோகசந்திரன் ஆகியோர் தற்கொலைக்கு தூண்டியதாக கூறியுள்ளார்.

    சுயேட்சை வேட்பாளருக்கு பிரசாரம் செய்த தொண்டர் தற்கொலை செய்த சம்பவம் ஒரத்தநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் போலீசார் பூமிநாதன் மர்மமான முறையில் இறந்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் மனவேதனை அடைந்த தி.மு.க. தொண்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தேன்கல்பட்டி காலனியைச் சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் மலைச்சாமி (வயது 30). தீவிர தி.மு.க. தொண்டரான இவர் கூலி வேலை செய்து வந்தார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல்நிலை குறித்து மலைச்சாமி உள்ளூர் தி.மு.க. நிர்வாகிகளிடம் அடிக்கடி விசாரித்து வந்தார். இந்த நிலையில் மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மலைச்சாமியை செக்கானூரணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மலைச்சாமியின் தாயார் அழகம்மாள் செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மலைச்சாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. செல்வி, பஞ்சவர்ணம் என்ற சகோதரிகள் உள்ளனர்.
    ×